44 கோடி தடுப்பூசி கொள்முதல் - மத்திய அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (19:02 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், கடந்த சில கொரொனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது,

நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அதில், அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும், தீபாவளி வரை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ரேசனில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் எனக் கூறினார்.

இநிலையில், நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வரும் ஜூல் 21 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும்  வழங்கப்படும் எனவும் இதற்கான செலவை அரசே ஏற்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், இன்று மத்திய அரசு, 44 கோடி கோவீஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி கொள்முதல் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, கொரொனா தடுப்பூசி வழங்குவதற்கான 25 கோடி கோவீஷீல்டு மற்றும் 19 கோவாக்‌ஷின் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இத்தடுப்பூசிகள் வரும் டிசம்பர் மாதம் வரையில் கிடைக்கும் எனவும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 30 கோடி பயோலாஜிக்கல் –இ தடுப்பூசி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் கூறியுள்ளதாவது: மத்திய அரசு சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து, 25 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் செய்வதாகவும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்‌ஷின் தடுப்பு மருந்து 30 கோடி டோஸ் வாங்கவும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

செப்டம்பருக்குள் 30 கோடி பயோலாஜிக்கல் –இ தடுப்பூசி  கிடைக்கும். இதற்காக இந்நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்க ரூ.1500 கோடி மத்திய அரசு செலுத்தி உள்ளதாகவும்  இம்மூன்று நிறுவனங்களிடம் இருந்து கொள் முதல் செய்யும் 74 கோடி டோஸ் மாநிலங்களுக்கு பிரிந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்