சிகிச்சைக்கு பணமின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (18:36 IST)
ஆந்திராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
 

 
ஆந்திராவில் உள்ள உப்படா கொத்தப்பள்ளி மண்டல் நகரில் அமரவில்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகல பூலட்சுமி (45). இவருக்கு பிரபு பிரகாஷ் (22), அணில்குமார் (20), பிரேம் சாகர் (18) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பிரபு பிரகாஷ் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
 
இவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் போதுமான பண வசதியின்றி தவித்துள்ளனர். இதனால், தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து குடும்பத்தினர் நான்கு பேரும், கயிறு ஒன்றினால் தங்களைக் கட்டிக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். பின்னர் நான்கு பேரும் அருகிலுள்ள உப்புடேரு என்ற நீரோடையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்