ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தல்: 3 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (21:34 IST)
இன்று மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. 
 
தமிழகத்தில் போட்டியின்றி 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டதால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்