கர்நாடகாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேர்களா?

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (20:26 IST)
தமிழகத்தை போலவே தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. இதனை அடுத்து அம்மாநில அரசும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. மேலும் 1262 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 992,779 ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனா நோய் தொற்றிலிருந்து 954,678 பேர் மொத்தம் குணம் அடைந்து உள்ளனர் என்றும் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12541 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
லும் இன்றைய நிலவரப்படி கர்நாடக மாநிலத்தில் 20 ஆயிரத்து 541 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்