ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்…போலீஸார் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (19:54 IST)
இந்தியாவில் பேருந்து, மகிழுந்து, சிற்றுந்து போன்று மக்களின் பயணத்திற்கு ஏற்புடையதாக இருப்பது ஆட்டோ.

இந்த ஆட்டோவில் பயணம் செல்லுபவர்கள்  குறிப்பட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என விதி உள்ளது.

இந்த நிலையில்,  உத்தரபிரதேச மா நிலம் பதேபூரில்   ஒரு ஆட்டோவில் ஓட்டுனர்27 பேரை சவாரி ஏற்றிச் சென்றதால் இதைப்பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

6 பேர் மட்டுமே அமரக்கூடிய நிலையில் விதியை மீறி அளவுக்குஅதிகமாக ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஓட்டு நருக்கு ரூ.11,500 அபராதம் விதித்துள்ளனனர் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்