இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

புதன், 5 ஏப்ரல் 2023 (19:00 IST)
குஜராத் எல்லையில், இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் மா நிலத்தில் முதல்வர் பூபேனந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநில எல்லையில், இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்பு படையினர்  நேற்று கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா என்ற மாவட்டத்தில் உள்ள பார்டர் அவுட் பகுதியில்( BOP) அருகேயுள்ள வாயில் மீது ஏறிக்குதித்த நபர் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார்.

அப்பகுதியைக் கண்காணித்துக் கொண்டடிருந்த  இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் அந்த நபரைக் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, அவர் பாகிஸ்தான் நாட்டிலுள்ள நகர்பார்க்கர் என்ற பகுதியில் வசித்து வந்ததாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் என்ன நோக்கத்திற்காக இந்தியாவுக்குள் நுழைய முயன்றார் என்று  அவரிடம் தீவிரமான விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்