மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வு!

செவ்வாய், 15 ஜூன் 2021 (16:51 IST)
மும்பை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்துடன் இருந்தது
 
சற்றுமுன் வர்த்தகம் முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 52,773 புள்ளிகள் என வர்த்தகம் முடிந்தது. இன்று வர்த்தம் தொடங்கும்போது சென்செக்ஸ் 52,869 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு அதன் பின்னர் சில புள்ளிகள் சென்செக்ஸ் கீழே இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் இன்று நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 15,869 என வர்த்தகம் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் மீண்டும் 53 ஆயிரத்து நெருங்கி வருவதை அடுத்து பங்கு சந்தையில் வர்த்தகம் செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதும் தடுப்பூசி காரணமாக பொருளாதாரம் இயல்பு நிலை திரும்பி வருவது மேல் பங்குச் சந்தைக்கு வர காரணம் என கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்