2024ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

Mahendran
சனி, 10 பிப்ரவரி 2024 (09:27 IST)
2024 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ள தேதி மற்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்து அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

www.nta.ac.in, https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்  நீட் தேர்வு அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுவதாகவும்,
 நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு - ரூ.1,700; EWS/OBC - NCL பிரிவினருக்கு - ரூ.1,600; SC/ST/PwBD/மூன்றாம் பாலினத்தவருக்கு - ரூ.1000   செலுத்த வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்