200 எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (17:16 IST)
ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் முன்னேற்பாடு இல்லாத திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 200 எம்.பி.க்கள் இன்றுகாலை தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுபற்றி பாராளுமன்றத்தில் பிரமதர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதனால் கடந்த ஐந்து நாட்களாக பாராளுமன்ற அவை கூச்சல் குழப்பதால் முடக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இதை பிரதமர் நரேந்திர மோடி கண்டுக்கொள்ளவில்லை. இந்த பிரச்சனையை மையப்படுத்தி, பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தின் உள்ள காந்தி சிலையின் முன் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 200 எம்.பி.க்கள் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
இந்நிலையில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எந்த சூழ்நிலையிலும் திரும்ப பெறாது என மத்திய மந்திரி வெங்கையா நாயுடி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வது ஆச்சரியமாக உள்ளது. இதனால் என்ன? எங்களோடு நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்