நடிகரிடம் 2 வாழைப்பழங்களுக்கு ரூ. 442 வசூலித்த ஹோட்டலுக்கு அபராதம்!

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (21:09 IST)
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் ராகுல் போஸ். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் ஒரு ஹிந்தி படத்தில் படப்பிடிப்புக்காக சண்டிகர் மாநிலத்துக்கு சென்றிருந்தார். எனவே அங்குள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது , 2 வாழைப்பழத்திற்கு அவர் ஆர்டர் செய்தார்.
 
பின்னர் ஹோட்டல் ஊழியர்கள், 2 வாழைப்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தனர். அதில் பில் தொகை ரூ.442 என்று குறிப்பிட்டிருந்தது. அதைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த பில் தொகையை போட்டோ பிடித்து தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அதில், ஜிஎஸ்டியோடு சேர்ந்து 2 வாழைப்பழங்களின் விலை ரூ. 442. 50 இந்த தொகையை கொடுக்க நான் தகுதி உள்ளவனா இல்லையா என்று எனக்கு தெரியாது என கேலியாக பேசிவது போன்று ஒரு வீடியோ அவர் வெளியிட சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் காலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.பழங்களுக்கு வரிவிதிப்பதில்லை என்றும் ஹோட்டல் எப்படி வரிவிதித்தது என்றும் கேட்டும் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் தற்போது அந்த ஹோட்டலுக்கு 25 ஆயிரம் ரூபார் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்