ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: இருவர் கைது

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:32 IST)
குஜராத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, ரூ.2.5 லட்சம் தொகையாக லஞ்சம் பெற்ற இரண்டு துறைமுக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
குஜராத் மாநிலத்தில் இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெற்ற ரூ.2.5 லட்சம் தொகை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
 
நவம்பர் 11ஆம் தேதி முதல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்