பசு பாதுகாப்பு மையத்தில் மூச்சு திணறி 18 மாடுகள் பலி

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (12:37 IST)
சத்தீஸ்கரில் பசு பாதுகாப்பு மையத்தின் அறையில் அடைத்து வைக்கப்பட்ட 18 பசு மாடுகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
வடமாநிலங்களில் பசுக்கள் மீதான அச்சுறுத்தல்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஸார் மாவட்ட கிராமத்தில் ஊராட்சி சார்பில் நடத்தப்படும் மாடுகள் பாதுகாப்பு மையத்தில் 18 பசு மாடுகள் உயிரிழந்துள்ளன.
 
பிரேதப் பரிசோதனையில் மாடுகள் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் சுவாசிக்க ஆக்ஸிஜன் இல்லாததால் அவை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதேபோல் கடந்தாண்டு துர்க் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் நடத்திய கேசாலையில் பசுக்களுக்கு போதிய உணவு வழங்காததால் பசிக்கொடுமையால் 200 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் அதேபோல் தற்பொழுதும் மாடுகள் உயிரிழந்த சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்