எம்எல்ஏ விடுதியில் 17 வயது சிறுமி பலாத்காரம்: இரண்டு பேர் அதிரடி கைது!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (12:42 IST)
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேரை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது.


 
 
44 வயதான மனோஜ் பகத் என்பவரின் கடையில் 17 வயது சிறுமி ஒருவர் பணிபுரிந்து வந்தார். அந்த சிறுமியை தனது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுப்பி வைக்குமாறு சிறுமியின் பெற்றோரிடம் கூறி கடந்த 14-ஆம் தேதி அழைத்து சென்றுள்ளார் மனோஜ் பகத்.
 
காரில் அழைத்து செல்லும் போது மோகன் பகத் காருக்குள் வைத்தே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் எம்எல்ஏ விடுதிக்கும் அழைத்து சென்று அங்கு ரூம் புக் செய்து மாத்ரே என்னும் நபருடனும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் அவர்.
 
அதன் பின்னர் வீடு திரும்பிய அந்த சிறுமி பயத்தின் காரணமாக தான் பலாத்காரம் செய்யப்பட்டதை யாரிடம் கூறவில்லை. இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி மது அருந்திவிட்டு குடி போதையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற மோகன் பகத், கடந்த 14-ஆம் தேதி சிறுமி தனக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறியுள்ளார்.
 
இதனையடுத்து அன்றைய தினமே அந்த சிறுமி காணாமல் போயுள்ளார். அதன் பின்னர் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான மோகன் பகத் மற்றும் மாத்ரேவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ விடுதி ஊழியர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்