கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள் 95 குழந்தைகள் பெற்று அவர்களுடைய குழந்தைக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற நிலையில் தற்போது இந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500 என மாறி உள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட கால விசா மூலம் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 பெண்கள் 95 குழந்தைகளை பெற்றுள்ளனர். மேலும் இந்த 22 பெண்கள் மற்றும் அவர்களுடைய 95 குழந்தைகளுக்கும் இந்திய அரசால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
95 குழந்தைகளில் பலர் தற்போது திருமணமாகி அவர்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது என்றும், இந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் என சேர்த்து மொத்தம் 500 பேர் இருப்பதாகவும் இவர்கள் அனைவருமே உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் என்ற பகுதியில் வசிப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளன.