வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு.. வாரத்திற்கு 5 நாட்கள் வேலையும் பரிசீலனை..!

Mahendran

சனி, 9 மார்ச் 2024 (08:10 IST)
தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். முதல்கட்டமாக நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டதாகவும் இன்று முதல் 100 ரூபாய் குறைவாக கேஸ் சிலிண்டர் புக் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக வங்கி ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையான வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதுமட்டுமின்றி வங்கி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 17 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாகவும் இந்த ஊதிய உயர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது

இது குறித்த ஒப்பந்தம் வங்கி ஊழியர்கள் சங்கம் கையெழுத்திட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊதிய உயர்வு காரணமாக 8 லட்சம் வாங்கி ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் முன் தேதி விட்டு அமல்படுத்தப்படுவதால் வங்கி ஊழியர்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு ரூபாய் 8284 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசினை செய்து வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்