அனைத்து பள்ளிகளை சுற்றியும் 144 தடை உத்தரவு: கர்நாடக அரசு உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (13:49 IST)
கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. 
 
ஹிஜாப் விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க படுவதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்த தடை உத்தரவு பிப்ரவரி 16ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்