15 வயது சிறுமியுடன் உல்லாசம்: 13 வயதில் தந்தையான சிறுவன்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (13:21 IST)
கேரளா மாநிலம் கொல்லத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளான். சில மாதங்களுக்கு முன்னர் 12 வயது சிறுவன் ஒருவன் தந்தையான சம்பவம் நடந்த நிலையில் இந்த சம்பவம் கேரளாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், 15 வயது சிறுமியுடன் தவறான உறவு கொண்டதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
 
பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவிப்பதற்காக சிறுமியிடம் குழந்தைக்கு காரணம் யார் என மருத்துவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சிறுமி விவரம் கூற மறுத்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் மருத்துவர்கள்.
 
போலீசார் நடத்திய விசாரணையில் இதற்கு காரணம் 13 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அந்த சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான்.
 
இந்நிலையில் அந்த சிறுவனின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் சிறுவன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால். அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுவான் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்