ஆரம்பம் முதல் திமுக வேட்பாளர் முன்னிலை.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம்..!

Mahendran

சனி, 13 ஜூலை 2024 (10:00 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி நடந்த நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இரண்டாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 11,928 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாமக வேட்பாளர் சி அன்புமணி 5,404 வாக்குகள் பெற்று சுமார் 6000 அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா இரண்டு சுற்று முடிவுகள் 819 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தான் முன்னிலையில் உள்ளார் என்பதும் தபால் வாக்குகளிலும் அவர்தான் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தடுத்த சுற்றுகளில் பெரிய வித்தியாசம் இருக்காது என்றும் அன்னியூர் சிவா இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறப்பட்டு வருகிறது. அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில் அதிமுக வாக்குகள் பாமகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பாமக அதிக வித்தியாசத்தில் பின்னடைவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்