ஐஸ்கிரீம் வாங்க சென்று கர்ப்பமாக திரும்பிய சிறுமி: சீரழித்த 12 காம வெறியர்கள்!

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (11:33 IST)
தலைநகர் டெல்லியில் ஐஸ்கிரீம் வாங்க சென்ற சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 12 பேரால் தொடர் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக வீட்டுக்கு திரும்பிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் 8 வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் ஐஸ்கிரீம் வாங்கி வருவதாக வெளியே சென்றார் ஆனால் அந்த சிறுமி திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை.
 
இதனால் சிறுமியின் தந்த போலீசிடம் தனது மகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தார். ஆனால் போலீசார் சிறுமியை கண்டுபிடிக்க பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் சிறுமியின் தந்தையும் பணத்தை கொடுத்து தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி சிறுமியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஒருவன் போலீசில் சரணடைந்துள்ளான். அவனை வைத்து போலீசார் சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
சிறுமியின் வீட்டின் அருகே 12 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஹோட்டலில் வேலை செய்பவர்கள். இவர்கள் தான் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க பணம் வாங்கிய போலீசார் மீதும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்