ஐநா-வையே காலி செய்து விடுவோம்: மிரட்டும் வடகொரியா!!

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (10:36 IST)
எங்கள் மீது தடைகளை விதித்தால் எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடகொரியா ஐநா-வை மிரட்டியுள்ளது. 


 
 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறது.
 
இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது.
 
மேலும், ஐநா அவசர கூட்டத்தை கூட்டி வடகொரியா மீது மேலும் சில பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்தது. 
 
இந்நிலையில், வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தங்களின் நாட்டை பாதுகாத்து கொள்வது என்பது வட கொரியாவின் சட்டப்பூர்வ உரிமை. மேலும் ஐநா வடகொரியா மீது தடைகளை கொண்டுவந்தால் தக்க எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்