இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி உள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்து பேசிய பிரதமர் சில அறிவுறுத்தல்களை கொடுத்து உள்ளார் என்பதும் அதன்படி மாநில அரசுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து என்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின் படி திருப்பதி கோவிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனை அடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது