கொரோனா விதிமீறல்...பிரதமருக்கு 1 லட்சம் அபராதம்

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:46 IST)
கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறிய பிரதமருக்கு காவல்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாடு நாட்வே. இந்நாட்டிலும் கொரோனா இரண்டாம் கட்ட அலை பரவலாக உள்ளது. இதனால் இங்கு அரசு வழிகாட்டுநெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில் பொதுவிழாக்களுக்கு அனுமதியில்லை;வெளியில் 10 பேருக்கு மேல் செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் பிரதமர் எர்னா சொல்பெர்க் தனனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது 13 பேர் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர். இது கொரோனா விதிமுறைகளுக்கு எதிரானது என அந்நாட்டு காவல்துறை அவருக்கு 1713 யுரோ அபராதம் விதித்துள்ளது. இதுஇந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.52.200  ஆகும். தனது செயலுக்கு பிரதமர் எர்னா சொல்பேர்க் மன்னிப்புக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்