இந்திய கடல் பகுதியில் பிடிபட்ட பாகிஸ்தான் படகு: ஆயுதங்கள் வைத்திருந்த 10 பேர் கைது

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (21:41 IST)
பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று இந்திய கடல் பகுதியில் பிடிபட்டதை அடுத்து பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
பிடிபட்ட 10 பேரிடம் விசாரணை நடத்தியதில் ரூபாய் 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் வெடி மருந்து மற்றும் போதைப் பொருட்கள் இருந்ததாக தெரிந்தது 
 
இதையடுத்து கடலோர காவல் படையினர் அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். குஜராத்தில் பயங்கரவாத எதிர்ப்பு படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 10 பேருடன் நுழைந்த பாகிஸ்தான் படகு பிடிபட்டதாக கடலோர காவல் துறை தெரிவித்துள்ளது
 
படகின் உள்ளே வெடி மருந்துகள் போதைப் பொருட்கள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் இந்த படகு விசாரணைக்காக கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்