இந்தியாவில் இத்தனை பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 7 மே 2016 (13:52 IST)
இந்தியாவில் 10-12 மில்லியன் மக்கள் மன நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதாக சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
 

 
பொருளியல் மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய கமிஷன் 2005-ல் அளித்த தகவலின் படி, 10-20 மில்லியன் மக்கள் (மக்கள் தொகையில் 1-2 சதவிகிதம்) கடுமையான மனநிலை நோயான மூளைக் கோளாறு மற்றும் பைபோலார் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், 50 மில்லியன் மக்கள் (மக்கள் தொகையில் 6.5 சதவிகிதம்) பொது குறைபாடுகளான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடா கூறினார்.
 
அரசு, தேசிய மனநல சுகாதார ஆய்விற்காக பெங்களூரில் உள்ள என்.ஐ.எம்.எச்.ஏ.என்எஸ் மூலம் நோய்த்தாக்கம் பற்றி மதிப்பிடவும், மன பாரம், நரம்பியல் மற்றும் பொருள் பயன்பாடு குறைபாடுகள் பற்றி இந்திய மக்கள் தொகையில் கணக்கெடுக்கவும், மன ஆரோக்கியம் குறித்து மதிப்பிடவும் நியமிக்கப்பட்டது.
 
இந்த கணக்கெடுப்பு ஜூன் 1, 2015-ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 27,000 நேர்காணல் நடத்தப்பட்டு இந்த வருடம் ஏப்ரல் 5-ல் முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
அடுத்த கட்டுரையில்