நான் சிரிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை: ரேணுகா சவுத்ரி எம்பி

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (23:58 IST)
சமீபத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்பி ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தது குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறிய ரேணுகா சவுத்ரி எம்பி, நான் சிரிப்பதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்றும், நான் இயல்பாகவே சத்தமாக சிரிக்கும் வழக்கம் உடையவர் என்றும் கூறினார்.

மேலும் பாராளுமன்றத்தில் சிரித்ததன் மூலம் அதிகார சக்திகளின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளதாகவும், என்னை விமர்சனம் செய்ததன் மூலம், பிரதமர் மோடி எவ்வளவு குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லவேளை சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை என்று கேலியாக குறிப்பிட்ட ரேணுகா, இனி தான் எச்சரிக்கையாக இருக்கவுள்ளதாகவும், பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என்று பாஜக எம்.பி.,க்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் ரேணுகா சௌத்ரி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்