தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு எதிரொலி: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

சனி, 13 ஜனவரி 2018 (05:21 IST)
இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் கூறியது நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி ஜே. செல்லமேஸ்வர், சக மூத்த நீதிபதிகளான ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து சுப்ரீம் கோர்ட்டு நிர்வாகம் பற்றி குறை கூறினர். மேலும் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி உடனடியாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும், அதற்கு காண வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின்போது அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அவர்கள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரத்தில் விலகி நிற்கவே மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்