இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை
வெள்ளி, 20 ஜனவரி 2023 (14:48 IST)
இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிமேகலை. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் கடந்தாண்டு வெளியானது.
இதில், இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில், போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.