சமையல் எண்ணெய்யில் மாட்டு எலும்பு எண்ணெய் கலப்படம்! – ஆந்திராவில் அதிர்ச்சி!

புதன், 18 ஜனவரி 2023 (10:59 IST)
ஆந்திராவில் சமையல் எண்ணெய்யில் மாட்டு எண்ணெய்யை கலந்து விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமையலுக்கு மக்களிடையே நல்லெண்ணெய், கடலெண்ணெய், சன்ப்ளவர் ஆயில் என பலவகை எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீப காலமாக எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில் உணவக தொழிலில் இது சற்றே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில உணவகங்கள் கலப்பட எண்ணெய்களை பயன்படுத்துவதாகவும் புகார் உள்ளது.

ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி என்ற பகுதியில் சிலர் கலப்பட எண்ணெய்யை விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் மாட்டு எலும்பு மற்றும் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்து அவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அங்கு அவர்கள் கட்டி வைத்திருந்த மாடுகள், மாட்டிறைச்சி, கலப்பட எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இரு நபர்களையும் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த கலப்பட எண்ணெய்யை உள்ளூர் உணவகங்கள் மற்றும் சோப்பு கம்பெனிகளுக்கு சப்ளை செய்ததாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்