டோரா - திரைவிமர்சனம்

வெள்ளி, 31 மார்ச் 2017 (16:58 IST)
நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் திரைப்படம் டோரா. அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில், விவேக் சிவா இசையில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், சற்குணம் சினிமாஸ் மற்றும் ஆரா சினிமாஸ் ஒன்றிணைந்து படத்தை தயாரித்துள்ளது.


 
 
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பி ராமையா தனது மகளான நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க ஆசை படுகிறார். திருமண ஏற்படுகளை துவங்கும் முன் குலதெய்வ கோவிளுக்கு நயன்தாராவை அழைத்து செல்ல திட்டமிட்டு கால் டாக்சி நிறுவனம் நடத்தி வரும் தனது தங்கையிடம் வாடகையின்றி கார் ஒன்றை பயணத்திற்கு தருமாறு கேட்கிறார்.

பணக்கார திமிரால் அவமான பட்டு திரும்புகிறார். அவமான துயரத்தில் இருவரும் கால் டாக்சி நிறுவனத்தை துவங்க முடிவு செய்து செகண்ட் ஹேண்டில் கார் வாங்க செல்கிறார்கள்.
 
கார் வாங்க சென்ற இடத்தில் பழைய பாடல் கார் ஒன்றால் ஈர்க்கப்பட்டு அந்த காரை வாங்குகிறார் நயன்தாரா. கார் வாங்கியவுடன் படத்தில் அமானுஷ்யங்கள் துவங்குகிறது.
 
நயன்தாராவின் கால் டாக்சி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவியாவிட்டாலும், அவ்வப்போது ஒருசில் ஆர்டர்கள் வருகிறது. அப்படியாக ஒருநாள், கொடைக்கானலுக்கு செல்ல வாடிக்கையாளர் ஒருவர் இவர்களை அனுகுகிறார். உடனே, நயன்தாரா தனது காருக்கு டிரைவரை போட்டு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார்.
 
கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் யாரோ ஒரு நபரை பார்த்தவுடன், அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தானாகவே சென்று அந்த நபரை துரத்துகிறது. அந்த நபரை பிடிக்க முடியாமல் போகவே கார் அங்கேயே நின்றுவிடுகிறது. இதனால் காரில் பயணம் செய்த அனைவரும் காரில் இருந்து இறங்கி ஓடிவிடுகிறார்கள்.
 
நயன்தாராவுக்கு இது தெரியவர காரை எடுத்துவர கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் இருந்து திரும்பும் போதும் அந்த நபர் வழியில் குறுக்கிட, கார் நயன்தாராவின் கட்டுப்பாட்டை மீறி அவனை துரத்தி கொல்கிறது. 
 
இது குறித்து குழப்பத்தில் இருக்கும் நயன்தாரா சாமியார் ஒருவரை சந்திக்க செல்கிறார். அப்போது அந்த சாமியார் காரில் ஒரு ஆவி இருப்பதாகவும் அது சிலரை கொல்லவே வந்திருப்பதாகவும், ஆவிக்கு தேவையான ஒன்று நயன்தாரவிடம் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
 
பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டிருப்பதை உணரும் நயன்தாரா, இந்த ஆபத்தில் இருந்து மீள்வாரா? அந்த ஆவி யாரை கொல்ல துடிக்கிறது? ஏன் கொல்ல நினைக்கிறது? எதற்கு நயன்தாராவிடம் வந்துள்ளது என்ற கேள்விகளுக்கு திகில் கலந்த களவையாக வரும் பதிலே படத்தின் மீதிகதை.
 
கதைகளை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் நயன்தாராவுக்கு இப்படம் சம தீனியாக அமைந்துள்ளது. முதல் பாதியில் காமெடியாகவும், பிற்பாதியில் தனது முழு திறமையையும் நிரூபித்திருக்கிறார். நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என் அழைப்பதில் தவரேயில்லை என்பதை காட்டியுள்ளார். 
 
அப்பாவாக வரும் தம்பி ராமையா படத்திற்கு கலகலப்பான பாதையை காட்டுகிறார். தனக்கே உரித்தான ஸ்டைலில் கலக்கி இருக்கிறார்.  அவரது ஒவ்வொரு வசனங்களும், செய்கைகளும் ரசிக்கும்படி உள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பும் அருமை. 
 
இயக்குநர் தாஸ் ராமசாமி தனது முதல் படத்திலேயே காமெடி கலந்த திகில் படத்தை அசத்தலாக கொடுத்திருக்கிறார். திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார். ஒரு சில காட்சிகள் ஃபெண்டசியாக தோன்றினாலும் அது பெரிய குறையாக தெரியவில்லை.
 
படத்தில் பாடல்கள் நன்றாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் விவேக் மெர்வின். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம். 
 
மொத்தத்தில் ‘டோரா’ ஒரு திகில் பயணம்...

வெப்துனியாவைப் படிக்கவும்