மிர்ச்சி சிவாவின் கலகலப்பான காமெடியில் கலக்கும் "இடியட்" விமர்சனம்!

சனி, 2 ஏப்ரல் 2022 (08:09 IST)
மிர்ச்சி சிவா, நிகில் கல்ராணி, அக்ஷரா கவுடா, ஆனந்தராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து உள்பட பலர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் இடியட். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார் அதுவே படத்திற்கு கூடுதல் பலம். தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம்பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
 
படத்தின் கதைக்களம்: 
 
பேய் கான்செப்டில் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் தான் இடியட். கதைக்களம் பெரிதாக எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதில் ஒருவரின் அறியாமையை வைத்து காமெடி படமாக இயக்கி இருக்கிறார் ராம் பாலா. ஹீரோ மற்றும் அவரது குரூப் ஒரு பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கிறது, அதிலிருந்து எப்படித் தப்பித்து வருகிறார்கள் என்பதே படத்தின் கதை. 
 
படத்தின் பிளஸ்:
 
சிவா பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் திரையரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது.  சிவாவிற்கும் ஆனந்தராஜ்க்கும் இடையே நடக்கும் காட்சிகளில் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பலைகள் ஏற்படுகிறது.  இரண்டாம் பாதியில் சிவா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இணைந்து எலி, பூனையை கண்டுபிடிக்கும் காட்சி மிக பிரமாதம். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பலமாக அமைந்துள்ளது. ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றிருப்பது ஆறுதல் கொடுக்கிறது.
 
படத்தின் மைனஸ்: 
 
காமெடி நடிகர்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் முதல் பாதியில் பெரிய அளவில் காமெடி காட்சிகள் நம்மை கவரவில்லை. படத்தில் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காமெடி செய்வதை குறிக்கோளாக வைத்து முயற்சி செய்திருப்பது கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக இல்லை. ஒரு முறை குடும்பத்தோடு இணைந்து இடியட் படத்தை பார்த்து ரசிக்கலாம். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்