ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால்!

திங்கள், 11 அக்டோபர் 2021 (10:27 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் வெற்றிப் படம் கொடுக்க முடியாமல் போராடி வருகின்றனர்.

ஒரு காலத்தில் மிகவும் பிஸியான இளம் நடிகர்களாக வலம் வந்துகொண்டிருந்தனர் சிவாவும், ஜீவாவும். ஜீவா எஸ் பி ஜனநாதன், ஷங்கர் மற்றும் கேவி ஆனந்த் ஆகிய கமர்ஷியல் இயக்குனர்களின் படங்களில் எல்லாம் நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து அவர் படங்கள் தோல்வி அடைந்ததால் அவருக்கு இப்போது கைவசம் நிறைய படங்கள் இல்லை. இதே நிலைதான் மிர்ச்சி சிவாவுக்கும்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து கோல்மால் என்ற நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை பொன்குமரன் என்பவர் இயக்க உள்ளார். இவர் கன்னடத்தில் பல படங்களை இயக்கியுள்ள நிலையில் தமிழில் கோல்மால் படத்தின் மூலமாக அறிமுகவாகவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்