வந்தே பாரத் ரயில் செல்லும் பகுதிகளில் தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிவேக ரயிலான வந்தே வாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது என்பது தெரிந்தது.
குறிப்பாக சென்னை முதல் மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரயில்கள் அவ்வப்போது மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருவதை அடுத்து வந்தே பாரத் ரயில் செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வந்தே பாரத் ரயில் செல்லும் பாதைகள் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.