பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி எவ்வளவு?

Siva

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (11:28 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தனர் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று பங்குச் சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 106 புள்ளிகள் உயர்ந்து 72 ஆயிரத்து 816 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையில்அதாவது 22,112 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று  பேங்க் பீஸ், ஸ்டேட் வங்கி, சவுத் இந்தியன் வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஏபிசி கேபிடல், சிப்லா, ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்