இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva

வியாழன், 22 பிப்ரவரி 2024 (10:43 IST)
பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் மிகவும் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் சில மணி நேரத்திற்கு முன் ஆரம்பித்த நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 395 புள்ளிகள் சார்ந்து 72300 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 125 புள்ளிகள் சரிந்து 21,941 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வந்தாலும் அடுத்த வாரம் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேபிடல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், ஐடிசி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, ஸ்டேட் வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்