வாரத்தின் முதல் நாளே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
திங்கள், 12 பிப்ரவரி 2024 (10:55 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 333 புள்ளிகள் சரிந்து 71,270 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 110 புள்ளிகள் குறைந்து 21,672 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச்சந்தையில்  முக்கிய பங்குகள் அனைத்துமே சரிந்துள்ளதாகவும் குறிப்பாக ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ALSO READ: ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்..!
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்