மோடி பிரதமர் என உறுதியானதால் மீண்டும் பங்குச்சந்தை உச்சம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
வெள்ளி, 7 ஜூன் 2024 (11:47 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த போது எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் பங்குச்சந்தை படுவீழ்ச்சி அடைந்து கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. 
 
ஆனால் பாஜக தனித்து ஆட்சி அமைக்கவில்லை என்றாலும் பாஜக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளதை அடுத்து மீண்டும் படிப்படியாக பங்குச்சந்தை உயர்ந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை இன்று மீண்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இன்று மும்பை பங்குச் சந்தை 1075 புள்ளிகள் உயர்ந்து 76150 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகளுக்கும் மேல அதிகரித்து 23,127   என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளின் விலையும் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்