திட்டமிட்ட கருத்துக்கணிப்பு.. பங்கு வர்த்தகத்தில் ஊழல்.. மோடி, அமித்ஷாவிடம் விசாரணையா?

Siva

வியாழன், 6 ஜூன் 2024 (19:37 IST)
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு நடந்துள்ளது என்றும், தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்கு சந்தையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும், இது கிரிமினல் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்,.
 
மேலும் பங்கு வர்த்தகத்தில் நடந்துள்ள ரூ.38 லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறிய ராகுல் காந்தி, குறிப்பிட்ட சிலர் பணம் சம்பாதிக்க பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் துணை போய் உள்ளனர் என்றும், வரலாற்றில் இல்லாத அளவிற்கு பங்கு சந்தையில்  பாஜகவினரால் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியுள்ளது என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ள நிலையில் விசாரணை நடத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்பில் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றி பெறும் என்று கூறியது. இதனை அடுத்து தான் திங்கட்கிழமை பங்குச்சந்தை தொடங்கியவுடன் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது 
 
ஆனால் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை என்று கூறப்பட்டவுடன் பங்குச்சந்தை மிக மோசமாக இறங்கியது. இதனை அடுத்து புதன்கிழமை மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது என்றதும் மீண்டும் பங்கு சந்தை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்