இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. மீண்டும் சவரன் ரூ.58 ஆயிரத்திற்கும் மேல்..!

Siva

வெள்ளி, 3 ஜனவரி 2025 (10:01 IST)
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ.7150 என விற்பனையான தங்கம் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.7260 என்று ஒரு கிராம் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 60 ரூபாய் ஒரு கிராமுக்கும், 640 ரூபாய் ஒரு சவரனுக்கும் உயர்ந்துள்ள நிலையில் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 80 ரூபாய் உயர்ந்து   7,260 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 640 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   58,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,913 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,304 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்