புத்தாண்டை அடுத்து இன்றும் தங்கம் விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
வியாழன், 2 ஜனவரி 2025 (09:53 IST)
நேற்று புத்தாண்டு தினத்தில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்னும் தங்கம் விலை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 30 ரூபாய் உயர்ந்து   7,180 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 240 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   57,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,826 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,608 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்