தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு 40 ரூபாயும் ஒரு சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டின் போது தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்ட நிலையில் தங்கம் விலை பயங்கரமாக சரிந்த நிலையில் அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு சவரன் 58,000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்