தங்கம் விலை இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் அதிகரிப்பு.. ஏழைகளுக்கு இனி எட்டாக்கனியா?

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (10:58 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 500 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதை அடுத்து ஏழைகளுக்கு இனி தங்கம் எட்டா கனி ஆகிவிட்டதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65  ரூபாய் அதிகரித்து ரூபாய் 5915.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 அதிகரித்து  ரூபாய் 47320.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6385.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51080.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 100 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 83.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 83500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்