அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு காரணமாக, இந்திய பங்குச்சந்தை உட்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் சரிந்தது என்பதும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நஷ்டம் அடைந்தனர் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
ஆனால் அந்த நிலைமைகள் சில நாட்களே நீடித்தன. கடந்த வாரம் பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி பெற்ற நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் டிரம்பின் அறிவிப்பால் பங்குச்சந்தையில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தை 1,540 புள்ளிகள் உயர்ந்து, 76,695 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 475 புள்ளிகள் உயர்ந்து, 23,300 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில், இந்துஸ்தான் லீவர், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி போன்ற சில பங்குகள் மட்டும் குறைந்துள்ளன. மற்ற அனைத்து பங்குகளும் உயர்வைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, நிப்டியில் உள்ள 50 பங்குகளில் 47 பங்குகள் உயர்வடைந்துள்ளது என தெரியவந்துள்ளது.