இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (09:40 IST)
பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிந்தது என்பதும் குறிப்பாக நேற்று 800 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்து உள்ளது.
 
சற்றுமுன் பங்குச்சந்தை 240 புள்ளிகள் உயர்ந்து 57390  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 55 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்து வரும் இரண்டு நாட்களிலும் பங்குச் சந்தை ஏற்றம் பெற வாய்ப்பிருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்