திடீரென சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

செவ்வாய், 20 ஜூன் 2023 (09:40 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றதில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆரம்பத்தில் பங்குச்சந்தை உயர்ந்தாலும் மாலையில் பங்குச்சந்தை சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிவில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 240 புள்ளிகள் சரிந்து 62,928 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 62 புள்ளிகள் சார்ந்து 18,694 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை இடையிடையே சரிதாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்