பங்குச்சந்தை தொடர்ந்து முன்னேற்றம்.. 64 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்..!

திங்கள், 19 ஜூன் 2023 (09:48 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 57,000 என்று இருந்த சென்செக்ஸ் தற்போது 63 ஆயிரத்து தாண்டி உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சுமார் 70 புள்ளிகளும் உயர்ந்துள்ளதை அடுத்து வெகு விரைவில் 64 ஆயிரத்து எட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்து 63,455 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 18,840 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
ஏற்கனவே பங்குச்சந்தையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் முதலீடு செய்தவர்கள் தற்போது மிகப்பெரிய லாபத்தில் உள்ளனர் என்பதும் இன்னும் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்