பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. மீண்டும் சென்செக்ஸ் 62,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (10:14 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்தது மட்டுமின்றி நீண்ட இடைவேளைக்கு பின்னர் சென்சக்ஸ் 62 ஆயிரத்தை தாண்டி உள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று பங்கு சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 62,000 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18,327 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 58,000 என்று இருந்த சென்செக்ஸ் தற்போது 62,000 என்று உயர்ந்துள்ளதை  அடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இதே ரீதியில் சென்றால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்