இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 61,388 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 18,155 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இனிவரும் காலங்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தகுந்த முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.