பட்ஜெட் கூட காப்பாற்றவில்லை.. மீண்டும் சரிவை நோக்கி சென்செக்ஸ்!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:43 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்து வருகிறது என்பதும் 62,000க்கும்  மேல் இருந்த சென்செக்ஸ் தற்போது 60 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கி உள்ளது என்பதும் தெரிந்ததே. அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிவு காரணமாக ஒட்டுமொத்த பங்கு சந்தை சரிந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ஓரளவு பங்கு சந்தை உயர்ந்தாலும், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 700 என்ற புள்ளிகளிலும் நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 17,594 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலாவது பங்கு சந்தை மீண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்