இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடக்கம்!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (10:59 IST)
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனிடையே இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 48,648 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 49 புள்ளிகள் உயர்ந்து 14,554 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்