1700 புள்ளிகள் சரிந்த பங்குச்சந்தை: என்ன காரணம்?

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (12:22 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடங்கிய உடனே 500 புள்ளிகளுக்கும் அதிகமாக இறங்கிய நிலையில் சற்று முன் சென்செக்ஸ் 1700 புள்ளிகள் இறங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
அதே போல் நிஃப்டியும் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை உச்சத்தில் இருந்ததால் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் கிடைத்தது. இந்த லாபத்தை திரும்பப் பெறும் வகையில் பங்குகளை பலர் ஒரே நேரத்தில் விற்பனை செய்வதன் காரணமாக தான் பங்குச் சந்தையில் இறக்கம் ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இருப்பினும் பங்குச்சந்தை மிக விரைவில் உயரும் என்றும் இந்திய பங்குச்சந்தையை பொருத்தவரையில் தைரியமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்